வெற்றிமாறன் இயக்கத்தில் நகைச்சுவை நடிகர் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடித்துள்ள விடுதலை படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.
‘அசுரன்’ படத்திற்குப் பின் விஜய் சேதுபதி, சூரியை வைத்து ‘விடுதலை’ படத்தை இயக்கியுள்ளார் வெற்றிமாறன். ஜெயமோகன் எழுதியுள்ள துணைவன் என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு விடுதலைத் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த, கதை முழுமையாகச் சினிமா ரசிகர்களைச் சென்றடைய வேண்டும் என்று வெற்றி மாறன் விரும்பியதால் 2 பாகங்களாக இப்படத்தை வெளியிடவுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஓராண்டிற்கும் மேல் இப்படத்தை வெற்றி மாறன் இயக்கி வந்தார். சத்தியமங்கலம், ஈரோடு போன்ற காட்டுப் பகுதியில் விடுதலை படப்பிடிப்பு நடத்தப்பட்டது. வழக்கமாகக் காமெடியனாக நடிக்கும் சூரி, இந்தப் படத்தில் போலீசாகவும், கைதியாக விஜய் சேதுபதியும் நடித்துவருகிறார். மேலும் இயக்குனர் கவுதம் மேனன், சேத்தன், பவானி ஸ்ரீ உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்திய திரைத்துறையில் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான ராஜிவ் மேனன் விடுதலைப் படத்தில் மிகமுக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இதனையும் படியுங்கள்: பொம்மை நாயகி திரைப்படம் ஓடிடி-யில் வெளியாவது எப்போது?
இந்த நிலையில் விடுதலை முதல் பாகத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. ட்ரைலரில் காவல்துறை விஜய் சேதுபதியை தீவீரமாக தேடும் விதமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஜெய்பீம் படத்தில் போலீஸாக நடித்த இயக்குனர் தமிழ் இந்த படத்தில் காவலராக நடித்துள்ளார். “ பிறக்கும் போதே ஒருத்தன் மேல, ஒருத்தன் கீழே, ஒருத்தன் சைடுலன்னு பிரிக்கிற நீங்க பிரிவினைவாதிகளா..? இல்லை எல்லொரும் சமம்னு சொல்ற நாங்க பிரிவினைவாதிகளா.? என்று விஜய் சேதுபதி பேசும் வசனத்துடன் இந்த ட்ரைலர் நிறைவடைந்துள்ளது.
இளையராஜா இசையமைக்கும் இப்படத்தை ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார். இப்படத்தின் முதல் பாடலான ‘ஒன்னோட நடந்தா’ என்ற பாடல் சுகா வரிகளில் தனுஷ், அநன்யா பட் குரலில் சமீபத்தில் வெளியாகி கவனம் அனைவரையும் கவனம் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.
– யாழன்