இந்தியாவில் 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவை ஆன்லைனில் எங்கு பார்க்கலாம் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
திரையுலகின் மிகப்பெரிய சர்வதேச திரைப்பட விருதுகளான ஆஸ்கார் 2023க்காக அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் போலவே, இந்த முறையும் அகாடமி விருதுகள் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் கொண்டாடப்பட உள்ளன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்தியாவிலிருந்து, தென்னிந்திய சினிமாவின் பிரபல இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் பிளாக்பஸ்டர் படமான ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் ‘நாட்டு நாடு’ என்ற சூப்பர்ஹிட் பாடலும் இந்த ஆஸ்கர் ரேஸில் இடம்பெற்றுள்ளது.
ஆஸ்கார் 2023 எப்போது தொடங்கும்
ஆஸ்கார் விருதுகள் 2023 பற்றி பேசுகையில், இந்த முறை சர்வதேச திரைப்பட விருதுகள் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி திரையரங்கில் மார்ச் 12 ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
இதை ABCயில் 8 PM ET/5 PM PTக்கு நேரலையில் பார்க்கலாம். அதேசமயம், நேர வித்தியாசம் காரணமாக, ஆஸ்கார் விருதுகள் 2023 இந்தியாவில் மார்ச் 13, 2023 திங்கட்கிழமை காலை 5:30 மணிக்கு ஒளிபரப்பப்படும். இந்தியாவில் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஆஸ்கர் விருதுகள் 2023 நிகழ்வை நேரலையில் காணலாம்.