‘வெப்பன்’ திரைப்படம் எப்போது ரிலீஸ்? படக்குழு அறிவிப்பு!

சத்யராஜ் நடிப்பில் உருவாகியுள்ள  ‘வெப்பன்’  திரைப்படம் ஜூன் 7 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  குகன் சென்னியப்பன் இயக்கயத்தில் சத்யராஜ் நடித்துள்ள சயின்ஸ் பிக்‌ஷன் திரைப்படம் ‘வெப்பன்’.  குகன் சென்னியப்பன் சவாரி,  வெள்ளை…

சத்யராஜ் நடிப்பில் உருவாகியுள்ள  ‘வெப்பன்’  திரைப்படம் ஜூன் 7 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

குகன் சென்னியப்பன் இயக்கயத்தில் சத்யராஜ் நடித்துள்ள சயின்ஸ் பிக்‌ஷன் திரைப்படம் ‘வெப்பன்’.  குகன் சென்னியப்பன் சவாரி,  வெள்ளை ராஜா ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.  இதில்,  வசந்த் ரவி,  ராஜீவ் மேனன்,  தன்யா ஹோப்,  ராஜீவ் பிள்ளை, யாஷிகா ஆனந்த்,  மைம் கோபி,  கனிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

மில்லியன் ஸ்டூடியோ புரொடக் ஷன்ஸ் சார்பில் எம்.எஸ்.மன்சூர் தயாரித்துள்ளார்.  இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்றது.  ஆயுதங்களால் அழிக்க முடியாத ஒரு சூப்பர் ஹியூமன் கதையாக இப்படம் தயாராகியுள்ளது.

இப்படம் இம்மாதம் வெளியாக இருந்தது.  ஆனால், சில காரணங்களால் ரிலீஸ் தேதி தள்ளிப் போனது.  இந்த நிலையில்,  இத்திரைப்படம் ஜூன் 7 ஆம் தேதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.