பிரபாஸ் நடிக்கும் ‘சலார்’ படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
‘கே.ஜி.எப். 2’ திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து, இயக்குநர் பிரசாந்த் நீல் ‘சலார்: பார்ட் 1- சீஸ்பயர்’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தை கேஜிஎஃப் பட தயாரிப்பாளர் விஜய் கிரகந்தரே தயாரித்துள்ளார். பிரபல நடிகர் பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் மலையாள நடிகர் ப்ரித்விராஜ் வில்லனாக நடித்துள்ளார். ஸ்ருதி ஹாசன் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் டிசம்பர் மாதம் 22-ம் தேதி வெளியாக உள்ளது. ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள ‘சலார்’, ஹாலிவுட் படங்களுக்கு இணையான சண்டைக் காட்சிகளை உள்ளடக்கியதாக இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படியுங்கள் : வெடித்துச் சிதறிய எரிமலை – ஜப்பான் கடலில் உருவான புதிய தீவு..!
https://twitter.com/SalaarTheSaga/status/1722575572013035628
படத்தின் டீசர் வெளியானது முதலே எதிர்பார்ப்பு எகிறியிருந்த நிலையில், ‘சலார்’ திரைப்படத்தின் அடுத்த அப்டேட் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் காத்திருந்தனர். இந்நிலையில், படத்தின் ட்ரெய்லர் குறித்த அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.







