முக்கியச் செய்திகள் தமிழகம்

பொறியியல் கலந்தாய்வு எப்போது? – அமைச்சர் தகவல்

பொறியியல் கலந்தாய்வு எப்போது நடக்கும் என்பது குறித்த ஆலோசனை கூட்டம் வரும் 17ம் தேதி நடத்தப்படுவதாக உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, இந்தியாவில் உள்ள பல்கலை கழகங்களில் இருப்பதுபோல சான்றிதழ் தொலைத்தவர்களிடம் கட்டணம் பெறுவதாக அண்ணா பல்கலை கழகத்தால் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அண்ணா பல்கலை கழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள முறையிலேயே தான் கட்டணம் பெறுவதற்கு ஆணையிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், நீட் தேர்வு முடிவடைந்தவுடன் பொறியியல் கலந்தாய்வு நடத்துவதே சரியானதாக இருக்கும் எனவும், பொறியியல் கலந்தாய்வு குறித்து வரும் 17ம் தேதி ஆலோசனை கூட்டம் நடத்தவுள்ளதாகவும், இதுகுறித்து பல்கலைக்கழகங்கள், தனியார் பல்கலை கழகங்கள் மற்றும் மாணவர் பிரதிநிதிகளிடம் கலந்தாலோசிக்கப்படும் என்றார். அதோடு, ஆன்லைனில் முறைகேடுகள் இதற்கு முன்பாக நடைபெற்றுள்ளதாகவும், அதுகுறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்றும் கூறினார்.

தொடாந்து பேசிய அவர், பொறியியல் கலந்தாய்விற்கு அலைபேசிகளிலேயே விண்ணப்பிக்கலாம் எனவும், பள்ளியிலேயே ஆன்லைன் மூலமாக பொறியியல் கலந்தாய்வு பதிவு செய்யவும், Facilitation centerகள் மூலமாக பதிவு செய்யவும் ஏற்பாடு செய்யப்படுள்ளதாகவும் தெரிவித்த அவர், அரசு கல்லூரிகளில் எல்லா இடங்களையும் நிரப்ப வேண்டும் என்பதே அரசின் நோக்கம் எனவும் கூறினார்.

 

Advertisement:
SHARE

Related posts

யாருக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சி – ஓபிஎஸ்க்கு முதலமைச்சர் சரமாரி கேள்வி

Saravana Kumar

‘ஒன்றிய’ வார்த்தையை கண்டு யாரும் மிரள தேவையில்லை: முதலமைச்சர்

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்கிறார் அமைச்சர் விஜயபாஸ்கர்!

Niruban Chakkaaravarthi