வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் முடங்கியது

தொழில்நுட்ப கோளாறு காரணமாக உலகின் பல்வேறு நாடுகளில் பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் செயலிகள் முடங்கியது. பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.…

தொழில்நுட்ப கோளாறு காரணமாக உலகின் பல்வேறு நாடுகளில் பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் செயலிகள் முடங்கியது.

பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக இவை அனைத்தும் முடங்கியுள்ளன. இதனால், பொதுமக்கள் பெருமளவில் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்த முடக்கம் குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஏதும் பேஸ்புக் நிறுவனத்திடம் இருந்து வரவில்லை.

பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் வேலை செய்யவில்லை என ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். இதையடுத்து மக்கள் டெலிகிராம், சிக்னல் செயலிகளில் தங்களது தகவல்களை பகிர்ந்து வருகின்றன. இதற்கு முன் மார்ச் மாதம் 17 நிமிடங்கள் முடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.