சமூக வலைதளங்கள் மூலம் பணம் பறிப்பவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை என்ன? கனிமொழி சோமு கேள்வி!

சமூக வலைதளங்கள் மூலம் பொதுமக்களை மிரட்டி பணம் பறிப்பவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை என்ன? என மாநிலங்களவையில் டாக்டர் கனிமொழி என்.வி.என். சோமு கேள்வி எழுப்பினார். சமூக வலைதளங்கள் மூலம்  பொதுமக்களை ஏமாற்றி, மிரட்டி பணம் பறிக்கும்  நபர்கள் மீது…

சமூக வலைதளங்கள் மூலம் பொதுமக்களை மிரட்டி பணம் பறிப்பவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை என்ன? என மாநிலங்களவையில் டாக்டர் கனிமொழி என்.வி.என். சோமு கேள்வி எழுப்பினார்.
சமூக வலைதளங்கள் மூலம்  பொதுமக்களை ஏமாற்றி, மிரட்டி பணம் பறிக்கும்  நபர்கள் மீது எடுக்கப்படும் விவரங்கள் பற்றி மாநிலங்களவையில் தி.மு.க. எம்.பி கனிமொழி என்.வி.என். சோமு கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பதில் அளித்தார். அவர் கூறியதாவது:
இணையதள சேவையைத் தவறாகப் பயன்படுத்தி, பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்கள் மூலமாக தவறான நபர்கள் மற்றும் குற்றப் பின்னணி கொண்டவர்கள் பொதுமக்களை பல வகையிலும் பாதிப்படைய செய்கிறார்கள் என்பதை அரசு உணர்ந்திருக்கிறது.
இணையதள குற்றங்களைக் குறைக்கவும், அதுகுறித்த தொடர் நடவடிக்கைகள் எடுக்கவும் மாநில அரசுகளின் ஒருங்கிணைப்புடன் தேசிய  அளவில் சைபர் குற்றங்களைப் பதிவு செய்ய cybercrime.gov.in என்ற பிரத்யேக போர்ட்டல் ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுதவிர, இணையதளக் குற்றங்கள் குறித்து  பொதுமக்களுக்கு போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்தியும் இத்தகைய குற்றங்களை எதிர்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மத்திய மாநில அரசுகளின் கீழ் செயல்படும் சட்டத்தை அமல்படுத்தும் விசாரணை அமைப்புகள் மூலம் இணையதளக் குற்றங்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்படுகிறது. தேசியக் குற்றப் பதிவேட்டு அமைப்பின் அறிக்கையின்படி, இனையதளம் மற்றும் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி, பொதுமக்களை அச்சுறுத்தியும், ஏமாற்றியும் பணம் பறித்ததாக, மிரட்டியதாக 2019 முதல் 2021 வரையிலான மூன்றாண்டுகளில் இந்தியாவில் சுமார் 1350 வழக்குகள் பதிவாகியிருக்கிறது. தமிழகத்தில் இந்த மூன்றாண்டுகளில் 75 வழக்குகள் பதிவாகியிருக்கின்றன என அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.