மதுரையில் ’லியோ’ இசை வெளியீட்டு விழா? குட்டி ஸ்டோரிக்கு காத்திருக்கும் விஜய் ரசிகர்கள்!

நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் திரைப்படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ்…

நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் திரைப்படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். மிஷ்கின், சஞ்சய் தத் இருவரும் வில்லன்களாக நடிப்பதாக அண்மையில் தகவல்கள் வெளியாகின.

லியோ படம் இந்தாண்டு அக்டோபர் மாதம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் முதல் பாடலான ‘நா ரெடி’ விஜய் குரலில் வெளியாகி சமூக வலைதளங்களில் இன்றளவும் டிரெண்டிங்கில் இருக்கிறது. இப்படம் வெளியீட்டிற்கு முன்பே ஓடிடி, இசை உரிமம், விநியோக உரிமம் என ரூ.350 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. லியோ படம் இந்தாண்டு அக்டோபர் மாதம் திரைக்கு வருகிறது.

இந்நிலையில், லியோ படத்தின் இசைவெளியீட்டு விழாவானது செப்டம்பர் மாதத்தில் மதுரையில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், துபாய் மற்றும் மலேசியாவில் லியோ படத்துக்கான நிகழ்ச்சிகள் பெரிய அளவில் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

விஜய் நடிக்கும் திரைப்படங்களின் இசை வெளியீட்டு விழாக்கள் பெரும்பாலும் சென்னையில் நடத்தப்பட்ட நிலையில், வேலாயுதம் படத்திற்கு பிறகு 12 ஆண்டுகள் கழித்து தென் மாவட்டத்தில் குறிப்பாக மதுரையில் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்தினால் அது அரசியல் ரீதியாகவும் பார்க்க வேண்டிய சம்பவமாக கூறப்படுகிறது.

இசை வெளியீட்டு விழாக்களில் நடிகர் விஜய் பேசும் அரசியலும் அவர் சொல்லும் குட்டி கதைகளும் பேசுபொருளாக மாறுவது வழக்கம். அந்த வகையில் இந்த இசை வெளியீட்டு விழாவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.