என்னது ஆயிரம் கோடியா? ஜவான் படத்தின் புதிய சாதனை!…

நடிகர் ஷாருக்கான் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘ஜவான்’. இப்படம் 1000 கோடி வசூலை நெருங்கவுள்ளது. அட்லி, ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். இந்தப் படத்தில் ஷாருக்கான் இரண்டு வேடங்களில்…

நடிகர் ஷாருக்கான் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘ஜவான்’. இப்படம் 1000 கோடி வசூலை நெருங்கவுள்ளது.

அட்லி, ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். இந்தப் படத்தில் ஷாருக்கான் இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். ஹீரோயினாக நயன்தாரா நடித்துள்ளார். விஜய் சேதுபதி, யோகி பாபு உள்ளிட்டோரும் நடித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் கடந்த செப்டம்பர் 7ம் தேதி வெளியானது.

இதுவரை இல்லாத அளவில் படத்துக்கு மிகப் பெரிய ஓபனிங் கிடைத்திருப்பதாகவும், படமும் சிறப்பாக இருப்பதாகவும் பாலிவுட் ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன. முதல் நாளில் இந்தி சினிமா வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் உலகம் முழுவதும் ரூ.129 கோடி வசூலித்துள்ளதாகவும், இரண்டு நாட்களில் ரூ.240.47 கோடி ரூபாய் வசூல் செய்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

உலகம் முழுவதும் 5நாள்களில் ரூ. 574.89 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. மேலும், ஷாருக்கான் ஒரு வருடத்தில் தொடர்ந்து இரண்டு ₹500 கோடி வசூல் செய்த ஒரே நடிகர் என்ற பெருமையையும் தட்டிச் சென்றுள்ளார். ஏனெனில் ஷாருக்கான் கடைசியாக நடித்த பதான் திரைப்படமும் வசூலில் சாதனை புரிந்திருந்தது.

10வது நாளான ஜவான் படத்தின் பாக்ஸ் ஆஃபீஸ் வசூல் கிட்டத்தட்ட ரூ.797.50 கோடியை வசூல் செய்ததாக படக்குழு நேற்று அறிவித்தது. அதனைதொடர்ந்து 13வது நாளில் ரூ.907.54 கோடி வசூலை கடந்துள்ளதாக படக்குழு அறிவித்தது. அதுமட்டுமின்றி ஹிந்தி வெர்சனில் மட்டுமே ரூ.430.44 கோடி வசூலை பெற்றுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், உலகம் முழுவதும் 16வது நாளில் ரூ.953.97 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதற்கு முன் யாரும் பார்த்திராத வெற்றி என படக்குழு போஸ்டரில் குறிப்பிட்டுள்ளது.

https://twitter.com/RedChilliesEnt/status/1705514703714447370

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.