பெரும்பாலும் நமது வாழ்க்கையில் மிகச் சிறிய விஷயங்களாகக் கருதப்படும் பல விஷயங்கள், நம் குடும்ப உறவுக்குள் மிகவும் மதிக்கப்படுகின்ற பொருளாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் சிறுவயதில் பார்பி பொம்மையை தொலைத்த மனைவிக்காக, கணவர் செய்த செயல் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பொதுவாகவே குடும்ப வாழ்க்கையில் நடக்கும் வேடிக்கையான மற்றும் காதல் சம்பவங்கள் சமூக ஊடகங்களில் வைரலாவது வழக்கம். அதிலும் குறிப்பாக தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான உறவு மற்றும் மனைவிக்கும் கணவனுக்கும் இடையேயான உறவு குறித்த வீடியோக்கள் எப்போதுமே கவனம் பெற்று பலரால் அதிகம் ரசிக்கப்படுகிறது. அந்த வகையில், நம் வாழ்வில் மிகச் சிறிய விஷயங்களாகக் கருதப்படும் பல விஷயங்கள், நம் குடும்ப உறவுக்குள் மிக உயர்வாக மதிக்கப்படுகின்றது என்பதை உணர்த்தும் விதமாக தற்போது ஒரு பதிவு வைரலாகியுள்ளது.
யோஷ் என்ற ட்விட்டர் பயனாளர் பகிர்ந்துள்ள அந்த பதிவில், ஒரு பார்பி பொம்மையுடன், ஒரு குறிப்பை தங்கிய கடிதமும் இடம் பெற்றுள்ளதோடு ,’ஒருமுறை என் கணவரிடம் நான் சிறுவயதாக இருந்த போது யாரோ எனது பார்பியை எடுத்துச் சென்றதாகக் கூறினேன்…’ என்ற வாசகமும் இடம் பெற்றிருந்தது. குறிப்பாக பார்பி பொம்மையுடன் பகிரப்பட்டிருந்த அந்த கடிதத்தில் ” என் அன்பு மனைவி ஆயிஷாவிற்கு நான் சொல்வது, எவ்வளவு சிறியதாக இருந்தாலும் அல்லது எவ்வளவு காலத்திற்கு முன்பு இருந்தாலும், நீங்கள் இழந்ததையும்
உங்களிடமிருந்து எடுக்கப்பட்டதையும் திரும்பப் கொடுப்பதை நான் எப்போதும் உறுதி செய்வேன், நான் உன்னை நேசிக்கிறேன் ” என எழுதப்பட்டிருந்தது.இந்த ட்விட் பகிரப்பட்டதிலிருந்து எழுபத்தெட்டு லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்து லைக் செய்து வருவதோடு,கணவரின் மனதைக் கவரும் குறிப்பைப் பாராட்டி பலர் கருத்துகளையும் பதிவிட்டு வருகின்றனர்.
https://twitter.com/wednesday_94/status/1674370414628184066?s=20
- பி.ஜேம்ஸ் லிசா








