நாளை மறுநாள் ஏவப்படும் சந்திராயன் 3 விண்கலம்: சிறப்புகள் என்ன? 

இஸ்ரோவின் சந்திராயன் 3 விண்கலம் நாளை மறுநாள் ஏவப்பட உள்ள நிலையில், அதன் சிறப்புகள் என்ன? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்….. சந்திரயான் 3 திட்டத்தின் மூலம் நிலவுக்கு மூன்றாவது முறையாக தனது  பயணத்தை…

இஸ்ரோவின் சந்திராயன் 3 விண்கலம் நாளை மறுநாள் ஏவப்பட உள்ள நிலையில், அதன் சிறப்புகள் என்ன? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்…..
  • சந்திரயான் 3 திட்டத்தின் மூலம் நிலவுக்கு மூன்றாவது முறையாக தனது  பயணத்தை இஸ்ரோ தொடங்கியுள்ளது. புதிய சோதனை, புதிய முயற்சி, புதிய தொழில்நுட்பம் என முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் சந்திரயான் 3 திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
  • புதிய சோதனையின் மூலம் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவதே சந்திரயான் 3-ன் பிரதான பணியாகும்.
  • கடந்த 2019 ஆம் ஆண்டில் விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான் 2 தோல்விக்கான காரணங்கள் குறித்து ஆராய்ந்து அதிநவீன வசதிகளுடன் சந்திரயான் 3 உருவாக்கப்பட்டுள்ளது.
  • உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் ஆகிய  கலன்களை உள்ளடக்கியதாக சந்திரயான் 3 தயாரிக்கப்பட்டுள்ளது.
  • துல்லிய  வடிவமைப்பாலும், மாறுபட்ட  வடிவத்திலும் லேண்டர் மற்றும் ரோவர்  உருவாக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
  • 1752 கிலோ எடை கொண்ட லேண்டர், 2148 கிலோ உந்துவிசை செயல்திறன்  என மொத்தம் 3900 கிலோ எடை கொண்டது.
  • நிலவின் மேற்பரப்பில் லேண்டரை பாதுகாப்பாக  மற்றும்  மென்மையாக தரையிறக்குவது சந்திராயன் 3-ன் முக்கிய பணியாக கூறப்படுகிறது.
  • அதோடு ரோவர் சுற்றுவதை உறுதி செய்வது அறிவியல் ரீதியிலான ஆராய்ச்சிகளை  மேற்கொள்வதும் சந்திராயன் 3-ன் இலக்கு என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • விண்வெளி   உலகமே வியக்கும் சந்திராயன் 3 திட்டம் 615 கோடி ரூபாய் மதிப்பில் தயாரிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.