#WeatherUpdate | வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி… சென்னையில் வெளுத்து வாங்கப்போகும் கனழை!

தென் மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் சென்னை தொடங்கி திருப்பத்தூர்…

தென் மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் சென்னை தொடங்கி திருப்பத்தூர் வரையிலும், வங்கக்கடல் ஓரத்தில் தஞ்சாவூர் வரையிலும் கனமழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பொழிந்து வருகிறது.

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, தென்மேற்கு வங்கக்கடல் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், தென் மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 2 நாட்களில் தமிழ்நாடு – இலங்கை கடற்கரை நோக்கி மேற்குவாக்கில் மெதுவாக நகரக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று முதல் 15-ந்தேதி வரை கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.