கோபிசெட்டிபாளையம் கரட்டூர் பகுதியில் அமைந்துள்ள தமிழக வெற்றி கழகத்தின் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “ஒரு இயக்கம் தமிழக வெற்றி களத்தில் பொருத்தவரை தியாகம், இன்னொரு பக்கம் இயக்கம் மனிதநேயத்தோடு இயங்குகிற இயக்கம் மக்களோடு பணியாற்றக்கூடிய தலைவர் விஜய் நாளை தமிழகத்தை ஆளப்போகிற தலைவர் பழைய சரித்திரம் சொல்லும். காரணம் 2026 தேர்தல் வெற்றி என்பது சரித்திரத்தில் இடம்பெறக்கூடிய வரலாறாக அமையும்.
இந்தியாவே வியக்கும் தமிழக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு வாழ்க என காலமாக அமையும் அதற்காகத்தான் மனிதநேய தொடர்ந்த இயக்கத்தை உருவாக்கியுள்ளார்கள். அதுமட்டுமல்ல தியாகத்தோடு இந்த இயக்கத்தை வழி நடத்திச் செல்கிறார். பல்வேறு சோதனைகளை கடந்து சாதனை படைப்பதற்காக இரவு பகல் பாராமல் எத்தனை எதிர்ப்புகளையும் தாண்டி தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் வீரன் நடைபெற்றுக் கொண்டுள்ளார். நான்காம் தேதி பதில் சொல்லும் சரித்திர தமிழகத்தில் முதலிடம் பெறக்கூடியவராக விஜய் திகழ்வார். மக்கள் கருத்துக்கணிப்பு தெளிவாக இருக்கும். நீங்கள் எங்கு வாக்களித்தீர்கள் என்பது உங்களுக்குத்தான் தெரியும்.
முதல் வாக்கு அளிக்கின்ற அத்தனை பேரும் புதிய மாற்றத்தை எதிர்கால தமிழகத்தை ஆள்வதற்கு ஒரு சிறந்த தலைவர் கிடைத்துள்ளார் என்ற எண்ணம் உள்ளது. அது நான்காம் தேதி பிரதிபலிக்கும். நயினார் நாகேந்திரன் தவெக ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாது என்று கூறியதற்கு, பாஜக இந்த தேர்தலுக்குப் பிறகு இருக்குமா, இருக்காதா என்பது தேர்தலுக்கு பின்பு தெரியும்.
அனைவரும் மனம் திறந்து விஜய் தமிழகத்தை ஆள வேண்டும் என்பது தான் இன்றைய செய்தி. இது மக்களுடைய பிரதிபலிப்பு. அதிகாரப்பூர்வமின்றி சமூக வலைதளங்களில் பரவி வரும் வேட்பாளர் பட்டியலுக்கு பதிலளிக்க முடியாது. வெற்றி பெற்றதற்கு பிறகு தமிழக வெற்றி கழக வேட்பாளர்கள் அனைவரையும் விஜய் கட்சி அலுவலகத்திற்கு வர சொல்லியது குறித்து கேட்ட கேள்விக்கு இது தொடர்ந்து நடைபெறக்கூடிய ஒன்று.
எங்களிடத்தில் உள்ளவர்கள் தெளிவாக உள்ளனர். அவருக்காக உயிரையும் தியாகம் செய்ய தயாராக உள்ளனர். இது உலக வரலாற்றில் மூன்று இரண்டு தலைவர்களுக்கு பிறகு தற்போது காணப்படுகிறது. இளம் வாக்காளர்கள் அதிகம் தமிழக வெற்றி கழகத்திற்கு வாக்களித்துள்ளனர் என்று வைகோ கூறிய கருத்திற்கு, உண்மையிலே மனம் திறந்து வைகோ தெரிவித்துள்ளார். 150 லிருந்து 200 சீட்டுக்கு நாங்கள் வெற்றி பெறுவோம் என்று தெரிவித்துள்ளார்.







