மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ புகழாரம் சூட்டியுள்ளார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், தான் களம் செல்கிறபோது, ஏந்திச் செல்கிற போர்வாள் தம்பி வைகோ என்று அண்ணன் கருணாநிதி தந்த இந்தப் பட்டத்தைவிட தனக்கு பெரிய பட்டம் ஏது என குறிப்பிட்டுள்ளார். தமிழின் நலன் அங்கெல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சிச் செய்யும் தமிழ்ப் போராளி அண்ணன் கருணாநிதி என புகழாரம் சூட்டியுள்ளார்.
தீரன் நீ வீரன் நீ திக்கெட்டும் பரவிடும் தீக்காட்டுக்குள்ளேயும் தென்றலாய் உலவிடும் தியாகி நீ என்றும் கருணாநிதி எளியோனைப் பற்றிச் சொன்னதையும் எப்படி மறப்பேன்?
நினைவில் இருப்பதில் எதை எழுத? எதை விட்டிட? எங்கள் அன்பின் மென் காற்றே வங்கக் கடலோரம், தங்கநிகர் கருணாநிதி துயிலுமிடம் செல், ஆறாவது முறையாக
ஆருயிர்ச் சகோதரர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சியை வழிநடத்துபவர் அண்ணன் கருணாநிதிதான் என குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் தலைசிறந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ, மு.க.ஸ்டாலினோடு நின்று தோள் கொடுப்போம் என்று சூளுரைப்போம் என்று தம்பி வைகோ சொன்னதாகச் சொல். இங்கே யாவரும் நலம் காற்றே அங்கே அண்ணன் கருணாநிதியின் நலம் கேள் காற்றே என உருக்கமாக வைகோ நினைவு கூர்ந்துள்ளார்.
– இரா.நம்பிராஜன்








