நான் நலமாக உள்ளேன் எனச் சொல்ல வேண்டும் என நினைத்தேன் அதற்கு இது தான் சரியான இடம் என்பதால் டிவிட்டரில் இணைந்தேன்.
விக்ரம் நடிப்பில்டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற திரைப்படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் கோப்ரா. இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார்.
இர்பான் பதான், மியா ஜார்ஜ், ரோஷன் மேத்யூ, சர்ஜனோ காலித், பத்மப்ரியா, கனிஹா, மிர்னாலினி, மீனாட்சி கோவிந்தராஜன், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தின் தயாரிப்பு பணிகள் நிறைவு பெற்ற நிலையில் கோப்ரா படக்குழு டிவிட்டர் ஸ்பேஸ் மூலமாக தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து வருகின்றனர்.
இத்தனை ஆண்டுகள் கழித்து ஏன் இப்போது டிவிட்டரில் இணைந்தீர்கள் என்ற கேள்விக்கு நடிகர் விக்ரம் “ நான் கொஞ்சம் கூச்ச சுபாவம் கொண்டவன் அதனால் தான் இத்தனை ஆண்டுகள் டிவிட்டர் வரவில்லை. இன்ஸ்டாகிராமில் மட்டும் போட்டோ பதிவு செய்து வந்தேன். எனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்த போது நான் நலமாக உள்ளேன் எனச் சொல்ல வேண்டும் என நினைத்தேன் அதற்கு இது தான் சரியான இடம் என்பதால் டிவிட்டரில் இணைந்தேன். விரைவில் கோப்ரா டிரெய்லர் வெளியாகும் சில வேலைகள் இருப்பதால் விரைவில் டிரெய்லர் வெளியாகும். டிரெய்லர் கண்டிப்பாக வரும். டிரெய்லர் வெளியிடாமல் படத்தை வெளியிட மாட்டோம். இதுவரை எங்களுக்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி” எனக் கூறியிருக்கிறார்.
ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இப்பத்தின் திரையரங்கு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்திற்குக் கிடைத்துள்ளது. இந்நிலையில், இந்த படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இம்மாதம் ஆகஸ்ட் 31-ம் தேதி வெளியாக உள்ளது.







