பிரபல ஹாலிவுட் நடிகை ஜெனிபர் லோபஸ் (53), இவரின் சொத்து மதிப்பு $400 மில்லியன் ஆகும். ஜெனிபர் லோபஸ் நடிகர் பென் அப்லெக் (50) என்பவரை முதன்முறையாக 18 ஆண்டுகளுக்கு முன் காதலித்து, நிச்சயம் செய்து, திருமணம் வரை சென்று பின்னர் பிரிந்து விட்டனர்.
தற்போது, இருவரும் மீண்டும் திருமணம் செய்து கொள்ள உள்ளனர். இது ஜெனிஃபர் லோபசுக்கு 4-வது திருமணம் ஆகும். தன்னைவிட 3 வயது இளையவரான பென் அப்லெக்கை அவர் திருமணம் செய்து கொள்ளவுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பென், ஹாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். ஜெனிஃபர் லோபஸ் மற்றும் பென் அப்லெக் ஆகியோர் ஜார்ஜியாவில் நடக்கவிருக்கும் திருமணத்தை நடத்தி வைப்பதற்கு உலகின் மிகவும் பிரபலமான ஊக்கமளிக்கும் பேச்சாளர்களில் ஒருவரான ஜே ஷெட்டியை நியமித்துள்ளனர். ஜே ஷெட்டி திங் லைக் ஏ மாங்க், லைஃப் சேஞ்சிங் கோட்ஸ் ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜே ஷெட்டி இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்தவர் ஆவார்.
நடிகை, நடன கலைஞர் மற்றும் பாடகியான ஜெனிஃபர் லோபஸ், இதற்கு முன் 3 பேரை திருமணம் செய்து விவாகரத்து செய்து விட்டார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதேபோன்று, பென் அப்லெக் நடிகை ஜெனிபர் கார்னர் என்பவரை திருமணம் செய்துகொண்டு விவாகரத்து செய்து விட்டார். இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.