“புதிய பதவிகளை ஏற்கப் போவதில்லை!” – எஸ்.பி.வேலிமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் கூட்டாக பேட்டி

புதிய பொறுப்புகளை ஏற்கப்போவதில்லை என எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், சி.வி. சண்முகம், அன்பழகன் ஆகியோர் கூட்டாக தெரிவித்துள்ளனர்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று கூட்டணி கட்சிகளின் ஆதரவுடம் ஆட்சியமைத்தது. இந்த தேர்தலில் அதிமுக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எட்ப்பாடி பழனிசாமிக்கு எதிராக எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் போர்க்கொடி தூக்கினர். இதனிடையே சட்டம்னறத்தில் பெரும்பான்மைக்கான வாக்கெடுப்பின் போது எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 25 பேர் தவெகவுக்கு ஆதரவளித்தனர்.

இதனையடுத்து தவெகவுக்கு ஆதரவளித்தவர்களில் பதவிகளை எடப்பாடி பழனிசாமி பறித்தார். மேலும் அவர்களை எம்.எல்.ஏ பதவியில் இருந்து நீக்க வேண்டும் என எடப்பாடி தரப்பில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரிடம் கடிதம் கொடுக்கப்பட்டது.

இதனையடுத்து எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோர் மீண்டும் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்தனர். இதனால் சபாநாயகரிடம் வழங்கப்பட்ட கடிதம் திரும்பப்பெறப் பட்டது. மேலும் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோருக்கு கட்சியில் புதிய பதவிகள் வழங்கப்பட்டன.

இந்த நிலையில் புதிய பொறுப்புகளை ஏற்கப்போவதில்லை என எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், சி.வி. சண்முகம், அன்பழகன் ஆகியோர் கூட்டாக போர்க் கொடி தூக்கியுள்ளனர்.


திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத் திறப்பு விழாவில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், சி.வி. சண்முகம், அன்பழகன் ஆகியோர் பங்கேற்றனர்

தொடர்ந்து, முன்னாள் அமைச்சர்களோடு எஸ்.பி., வேலுமணி பேட்டியளித்தார்,அப்போது ​அவர் கூறியதாவது; கட்சியில் தங்களுக்கு வழங்கப்பட்ட துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட புதிய பொறுப்புகளை ஏற்க முடியாது எனத் தெளிவுபடுத்திய எஸ்.பி. வேலுமணி, தேர்தல் தோல்வி குறித்து ஆராய வேண்டும், கட்சியை விட்டு நீக்கப்பட்ட சசிகலா, டி.டி.வி. தினகரன் உள்ளிட்ட அனைவரையும் மீண்டும் சேர்த்து கட்சியைப் பலப்படுத்த வேண்டும் எனத் தலைமைக்குக் கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றார்.

மேலும், கடந்த காலத்தில் ஓ.பி.எஸ் அணி இணைந்தபோது கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை எனக் குற்றம்சாட்டினார்.


தொடர்ந்து பேசிய நத்தம் விஸ்வநாதன், “அம்மா மறைவிற்குப் பின் 134 எம்.எல்.ஏ-க்களுடன் இருந்த கட்சி, தற்போது படிப்படியாகத் தேய்ந்து மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் கட்சி வளர்ச்சியடைந்துள்ளதா அல்லது தளர்ச்சியடைந்துள்ளதா என்பதைத் தலைமை மனசாட்சியுடன் சிந்தித்துப் பார்க்க வேண்டும்” என்றார். தோல்வி குறித்து ஆலோசனைகளைக் கேட்டுக் கேட்காத தலைமைக்கு எதிராகத் தக்க காலத்தில் தகுந்த முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.