இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த கூட்டத்தில் காங்கிரஸ், திமுக, விசிக, மதிமுக, ஐயூஎம்எல், கொமதேக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய லோக் தளம், ஆம் ஆத்மி, தேசிய மாநாட்டு கட்சி, தேசியவாத காங்கிரஸ், ஜார்க்கண் முக்தி மோர்ச்சா, காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி உள்ளிட்ட 26 கட்சிகள் பங்கேற்றன.
இந்த கூட்டத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவை வீழ்த்துவது தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும் தேசிய அளவில் பொது வேட்பாளரை நிறுத்துவது, அந்தந்த மாநிலங்களில் பெரும்பான்மையாக உள்ள மாநில கட்சிகளின் ஆதரவுடன் பா.ஜ.க. வேட்பாளருக்கு எதிராக வேட்பாளரை நிறுத்துவது குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த கூட்டத்தில் ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் பேசியதாவது:
“இந்த கூட்டம் நாட்டிற்கு தேவையான ஒன்று. நாட்டையும் ஜனநாயகத்தையும் காப்பாற்ற வேண்டும். விவசாயிகள் கூலித்தொழிலாளிகள் இளைஞர்கள் என அனைவரையும் பாதுகாக்க வேண்டும். பிரதமர் மோடிக்கு பிரியா விடை தரப் போகிறோம். அதற்காகவே பெங்களூருவில் ஒன்று கூடி இருக்கிறோம்.
இவ்வாறு ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் பேசினார்.








