ஒற்றுமையை வலியுறுத்தவே பாத யாத்திரை செல்கிறோம்-ஜெய்ராம் ரமேஷ்

ராகுல் காந்தி எம்பியின் இந்திய ஒற்றுமைக்கான 4வது நாள் நடை பயணத்தை கன்னியாகுமரி மாவட்டம், முழகுமூடு பகுதியில் இருந்து தொடங்கினார். இந்நிலையில்,  பாராளுமன்ற உறுப்பினர் ஜெய்ராம் ரமேஷ் நியூஸ் 7 தமிழுக்கும் பிரத்யேக பேட்டியில் கூறியதாவது:…

ராகுல் காந்தி எம்பியின் இந்திய ஒற்றுமைக்கான 4வது நாள் நடை பயணத்தை
கன்னியாகுமரி மாவட்டம், முழகுமூடு பகுதியில் இருந்து தொடங்கினார். இந்நிலையில்,  பாராளுமன்ற உறுப்பினர் ஜெய்ராம் ரமேஷ் நியூஸ் 7 தமிழுக்கும் பிரத்யேக பேட்டியில் கூறியதாவது:

இந்திய ஒற்றுமை பயணத்தை கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது நடத்தி வருகிறோம். இன்று மாலை கேரள செல்கிறோம்.

இந்த யாத்திரை பாஜகவுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளன. பாஜக கூறுவது போன்று நாங்கள் கிறிஸ்தவ கோவில்களுக்கு மட்டும் செல்லவில்லை. அதிகளவு கண்டெய்னர் மற்றும் நடை பயணத்தில் ஈடுபட்டுள்ள 300 க்கும் மேற்பட்டோர் தங்க வேண்டியது உள்ளதால் நாங்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளை தேர்வு செய்து உள்ளோம்.

பாஜக நாட்டை பிரித்துவிட்டது. அவர்களுக்கு தெரிந்தது எல்லாமே இந்து, முஸ்லிம், இந்து கிறிஸ்துவம் என பிரித்து ஆளுவதுதான். இதை வைத்தே அரசியல் செய்கின்றனர்.

எங்கள் யாத்திரை என்பது ஒற்றுமையை வலியுறுத்துவதே. அதிக பலம் வாய்ந்தது காங்கிரஸ் கட்சி. இந்த யாத்திரை மூலம் எதிர்கட்சிகளை திரட்ட வேண்டும் என்ற நோக்கம் இல்லை. பாஜக கட்சி என்பதை விட விஷ கட்சி என்பதே மேல் என்றார் ஜெய்ராம் ரமேஷ்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.