32.2 C
Chennai
May 20, 2024
உலகம் செய்திகள் சினிமா

அமெரிக்காவில் ஒரே ஆண்டில் 777 திரைப்படங்கள் பார்த்து கின்னஸ் சாதனை!

அமெரிக்காவை சேர்ந்த சாக்ஸ்வோப் என்பவர் ஒரே ஆண்டில் 777 திரைப்படங்களை பார்த்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

கின்னஸ் சாதனை படைப்பவர்களின் பட்டியல் சமீபகாலமாக நீண்டு கொண்டே வருகிறது. அந்த வகையில் அண்மையில் சினிமா ஆர்வலர் ஒருவரும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளார். அமெரிக்காவை சேர்ந்த சாக்ஸ்வோப் என்பவர் கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை முதல் 2023 ஜூலை வரையிலான ஒரு ஆண்டில் மட்டும் மொத்தம் 777 திரைப்படங்கள் பார்த்து கின்னஸ் சாதனையை படைத்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

32 வயதான இவர் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 100 முதல் 150 படங்கள் வரை தியேட்டரில் பார்த்து வந்துள்ளார். இதற்கு முன்பு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த வின்சென்ட் க்ரோன் என்பவர் கடந்த 2018-ம் ஆண்டு 715 படங்கள் பார்த்ததே சாதனையாக இருந்தது. அதனை சாக்ஸ்வோப் தற்போது முறியடித்துள்ளார். அதே போல் சாக்ஸ்வோப் கின்னஸ் சாதனை படைப்பதற்காக ‘மினியன்ஸ்: ரைஸ் ஆப் க்ரு’ படத்தில் தொடங்கி ‘இன்டியானா ஜோன்ஸ் அண்ட் தி டயல் ஆப் டெஸ்டினி’ வரை அங்குள்ள ரீகல் சினிமாஸ் தியேட்டரில் பலதரப்பட்ட படங்களையும் பார்த்துள்ளார்.  இந்த சாதனை படைப்பதற்கென்று சில விதிமுறைகள் உள்ளன. அதாவது படம் பார்க்கும் போதும், மது அருந்தியிருக்க கூடாது, உணவு உட்கொள்ளக்கூடாது என்பது உள்ளிட்ட விதிமுறைகளை தவறாமல் சாக்ஸ்வோப் பின்பற்றி வந்துள்ளார். இதனை தியேட்டர் ஊழியர்களும் கண்காணித்து உறுதி செய்துள்ளனர். ஒவ்வொரு வார நாட்களிலும் காலை 6.45 மணி முதல் மதியம் 2.45 வரை வேலைக்கு செல்லும் சாக்ஸ்வோப் அதன்பிறகு தியேட்டருக்கு சென்று படங்கள் பார்த்து இந்த சாதனையை படைத்துள்ளார்.

இவர் வார இறுதி நாட்களில் 3க்கும் மேற்பட்ட காட்சிகளை பார்த்துள்ளார். இவர் பார்த்த அனைத்து திரைப்படங்களிலும், அதிக முறை பார்த்தது புஸ் இன் பூட்ஸ்: தி லாஸ்ட் விஷ். இந்தப் படத்தை அவர் 47 முறை பார்த்துள்ளார். அவருக்கு மிகவும் பிடித்த படம் ஸ்பைடர் மேன்: அக்ராஸ் தி ஸ்பைடர்-வெர்ஸ் மற்றும் தி டெவில் கான்ஸ்பிரசி ஆகும்.ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஸ்வோப் இந்த முயற்சியை மேற்கொண்டதாகவும், அவருக்கு அஸ்பெர்ஜர் எனப்படும் ஒரு வகையான மன இறுக்க நோய் பாதிப்பு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் அவரது இந்த சாதனையை தானே முறியடிக்க முயற்சி செய்ய வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading