இந்தியாவில் வார்னர் பிரதர்ஸ், HBO மேக்ஸ் ஸ்ட்ரீமிங் உரிமையை ஜியோ சினிமா கைப்பற்றியுள்ளது.
அடுத்த மாதம் முதல், HBO Max Original மற்றும் Warner Brosல் ஒளிபரப்பாகும் கண்டண்டுகளை , இந்தியப் பார்வையாளர்களுக்குக் கொண்டு வருவதற்கான புதிய பல ஒப்பந்தத்தை Warner Bros, Discovery மற்றும் Viacom18 உரிமத்தை JioCinema பெற்றுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின்படி, HBO ஒரிஜினல், மேக்ஸ் ஒரிஜினல் மற்றும் வார்னர் பிரதர்ஸ் தொலைக்காட்சித் தொடர்கள் JioCinema இல் திரையிடப்படும். அனைத்து HBO கண்டண்டுகளும் Disney+ ஹாட்ஸ்டாரை விட்டு வெளியேறி கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு இந்த உரிமம் JioCinema-க்கு வந்துள்ளது.
ஹவுஸ் ஆஃப் தி டிராகன் (கேம் ஆஃப் த்ரோன்ஸ் ப்ரீக்வெல் ஸ்பின்-ஆஃப்), தி லாஸ்ட் ஆஃப் அஸ், மற்றும் தி ஒயிட் லோட்டஸ் போன்ற HBO இன் மிகவும் பாராட்டப்பட்ட நிகழ்ச்சிகளின் தற்போதைய வரவிருக்கும் ட்ரூ டிடெக்டிவ்: நைட் கன்ட்ரி, யூபோரியா, The Rise of the Lakers Dynasty மற்றும் Perry Mason ஆகிய அனைத்தும் அமெரிக்காவில் ஒளிபரப்பாகும் அதே நாளின் இந்தியாவிலும் ஒளிபரப்பப்படவுள்ளது.








