உதகை | அதிகாலையில் கொட்டிய உறைபனிப் பொழிவு!

உதகையில் அதிகாலையில் கொட்டித் தீர்த்த உறைப்பனி பொழிவால் கடும் குளிர் நிலவி வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் துவங்கி பிப்ரவரி முதல் வாரம் வரை உறைப்பனி காலமாகும். ஆரம்பத்தில் நீர்ப்பனி பொழிவுடன்…

Wake up Early morning frost!

உதகையில் அதிகாலையில் கொட்டித் தீர்த்த உறைப்பனி பொழிவால் கடும் குளிர் நிலவி வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் துவங்கி பிப்ரவரி முதல் வாரம் வரை உறைப்பனி காலமாகும். ஆரம்பத்தில் நீர்ப்பனி பொழிவுடன் துவங்கும், பின்னர் உறைபனிப் பொழிவாக காணப்படும். இந்த சமயத்தில் அப்பகுதியில் கடும் குளிர் நிலவும். இந்நிலையில் நவம்பரில் துவங்க வேண்டிய உறைபனிப் பொழிவு டிசம்பர் இறுதியில் துவங்கிய நிலையில், கடந்த சில நாட்களாக உறைபனிப் பொழிவின் தாக்கம் சற்று அதிகமாக உள்ளது.

இதனிடையே வானிலை ஆய்வு மையமும் நீலகிரி மாவட்டத்தில் பகலில் வறண்ட வானிலையும், இரவு மற்றும் அதிகாலை வேளைகளில் கடுமையான உறைபனிப்பொழிவு நிலவும் என தெரிவித்திருந்தது. இதற்கேற்ப இன்று அதிகாலை வழக்கத்தை விட உறைப்பனியின் தாக்கம் அதிகரித்தது. குறிப்பாக காந்தல் முக்கோணம், தலைகுந்தா, தாவரவியல் பூங்கா மைதானம், குதிரை பந்தய மைதானம் உள்ளிட்ட இடங்களில் உறைப்பனி கொட்டி கிடந்தது.

இதன் காரணமாக கடும் குளிர் நிலவி வருவதால் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். குறிப்பாக தாழ்வான பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியசாக பதிவாகியது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.