விருத்தகிரீஸ்வரர் கோயில் மாசிமக தெப்பத் திருவிழா: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

விருத்தகிரீஸ்வரர் ஆலய மாசி மக தெப்பத் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர். கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் அமைந்துள்ள அருள்மிகு விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் திருக்கோவிலில் மாசி மக திருவிழா கடந்த…

விருத்தகிரீஸ்வரர் ஆலய மாசி மக தெப்பத் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் அமைந்துள்ள அருள்மிகு விருத்தாம்பிகை,
பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் திருக்கோவிலில் மாசி மக திருவிழா
கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்த கோயில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட பழமையான திருக்கோயிலாகும்.

இதையும் படிக்கவும்: சர்வதேச மகளிர் தினம்; சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள் நிறுவனம்

தென்னாட்டின் விருத்தகாசி என அழைக்கப்படும் விருத்தகிரீஸ்வரர் ஆலயம் அப்பர், சுந்தரர், சம்பந்தர், அருணகிரிநாதர், ராமலிங்க சுவாமிகள் உள்ளிட்ட பல பெரியோர்களால் போற்றிப் பாடப்பட்ட சிவன் திருத்தலமாகும். இத்திருத்தலத்தில் பல முனிவர்கள், பெரியோர்கள் முக்தி பெற்றிருப்பதாக புராண வரலாறுகள் கூறுகிறது.

இத்திருத்தலத்தில் ஐந்து கொடிமரங்கள், ஐந்து தேர்கள் உள்ளது சிறப்பம்சமாகும். விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தின் இன்று மாசி மகத்தின் இறுதி திருவிழாவான தெப்பத் திருவிழா கடலூர் ரோட்டில் உள்ள விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் அம்மன் தெப்பக்குளத்தில் நடைபெற்றது. சுப்ரமணியர், வள்ளி தெய்வானை உடன் மூன்று முறை புஷ்ப பல்லாக்கில் தெப்பக்குளத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தெப்பத் திருவிழாவை காண சுற்றுவட்டார கிராம பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இதற்காக விருத்தாசலம் நகராட்சி நிர்வாகம்
பல சிறப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தது. பாதுகாப்பு பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.