பர்படாஸில் உள்ள உணவகம் முன் விராட் கோலி அனுஷ்கா ஷர்மா நின்றபடி போஸ் கொடுக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
அண்மையில் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு மனைவி அனுஷ்கா ஷர்மாவுடன் சுற்றுலா சென்றார். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவ்வப்போது இணையத்தில் பகிர்ந்து வந்தார்.
இந்நிலையில் லேட்டஸ்டாக இன்று ஒரு புகைப்படத்தை அவர் பகிர்ந்துள்ளார். அதில் பர்படாஸில் உள்ள உணவகம் முன் அனுஷ்கா ஷர்மாவும், விராட்டும் போஸ் கொடுத்தபடி நிற்கின்றனர். நாங்கள் எங்கும் சாப்பிடாத சில சிறந்த உணவை இங்கு சாப்பிட்டோம் என அந்த பதிவில் கோலி தெரிவித்துள்ளார்.
விராட்டின் இன்ஸ்டாகிராம் பதிவை முதலில் லைக் செய்தவர்களில் நடிகை தீபிகா படுகோனும் ஒருவர். உணவுப் பிரியரான விராட், கடந்த ஆண்டு, மும்பையில் ஒரு புகழ் பெற்ற இடத்தில் தனது புதிய உணவகத்தைத் திறந்தார். மறைந்த பாடகரும் நடிகருமான கிஷோர் குமாரின் பங்களா, டெல்லி மற்றும் கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் அவருக்கு உணவகங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.







