விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘லியோ’ படத்தில் இடம் பெற்றுள்ள ‘நான் ரெடி தான் வரவா’ பாடலுக்கு பல பிரபலங்கள் டான்ஸ் ஆடி வீடியோ வெளியிட்டு வரும் நிலையில், தற்போது இந்தியாவின் பிரபல கிரிக்கெட் வீரரான ஷிகர் தவானும் அந்த பாடலுக்கு நடமாடிய விடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வரும் நிலையில், இப்படத்தின் முதல் சிங்கள் பாடலான ‘நான் ரெடி தான் வரவா’ பாடல் சென்ற மாதம், விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது.
நடிகர் விஜய், அனிருத், அசல் கோலார் ஆகியோர் பாடியுள்ள இந்த பாடல் வெளிவந்தது முதலே ரசிகர்களிடத்தில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருவதோடு, பல பிரபலங்கள் இந்த பாடலுக்கு டான்ஸ் ஆடி வீடியோவையும் அவ்வப்போது வெளியிட்டும் வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது இந்தியாவின் பிரபல கிரிக்கெட் வீரரான ஷிகர் தவானும் இந்த பாடலுக்கு நடமாடிய வீடியோவை தனது சமூகவலைதள பாக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில், தற்போது அது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதே நேரத்தில் ஷிகர் தவான் ஆடிய அந்த வீடியோவை இசையமைப்பாளர் அனிருத்தும் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் ஷேர் செய்துள்ளதால், அந்த விடியோவிற்கு பார்வைகளும், லைக்குகளும் குவிந்து வருகிறது. சமீபத்தில் ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ள நிலையில், இந்த படம், வரும் அக்டோபர் 19 திரைக்கு வரவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.
THIS IS JUST W❤️🔥W 👑
THE @SDhawan25 dances to #NaaReady from #Leo 🔥 ➡️ https://t.co/KBhQjLFX0F#Thalapathy @actorvijay @Dir_Lokesh @7screenstudio @anirudhofficial @Jagadishbliss @immasterdinesh pic.twitter.com/R2qfw3Iqvd
— Sony Music South India (@SonyMusicSouth) July 23, 2023
- பி. ஜேம்ஸ் லிசா








