தமிழ் திரைப்படங்களின் வன்முறைக்காட்சிகளால் மலேசிய தமிழ் மக்களுக்கு பாதிப்பு!! மலேசிய நாட்டின் துணை அமைச்சர் சரஸ்வதி நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி!!!

தமிழ் திரைப்படங்களின் வன்முறைக்காட்சிகளால் மலேசிய தமிழ் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக மலேசிய நாட்டின் துணை அமைச்சர் சரஸ்வதி தெரிவித்துள்ளார். மலேசியா நாட்டில் நடைபெறும் 11 ஆவது உலகத் தமிழ் மாநாட்டில் அந்நாட்டின் துணை அமைச்சர்…

தமிழ் திரைப்படங்களின் வன்முறைக்காட்சிகளால் மலேசிய தமிழ் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக மலேசிய நாட்டின் துணை அமைச்சர் சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

மலேசியா நாட்டில் நடைபெறும் 11 ஆவது உலகத் தமிழ் மாநாட்டில் அந்நாட்டின் துணை அமைச்சர் சரஸ்வதி கலந்துகொண்டார்.

அப்போது துணை அமைச்சர் சரஸ்வதி அளித்த பேட்டியில் கூறியதாவது:

தமிழ் மொழியை, தமிழ்ப் பள்ளிகளை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே 4 ஆவது முறையாக மலேசியாவில் மாநாடு நடத்தப்படுகிறது. பல சவால்களை எதிர்நோக்க வேண்டிய நிலையிலேயே தமிழ் மக்கள் நிலை மலேசியாவில் உள்ளது. மலேசிய தமிழர்களில் ஆண்களை விட, பெண்கள் கல்வி கற்பதில் அதிக ஈடுபாடு காட்டுகிறார்கள்.

மலேசியாவில் தமிழ்த் திரைப்படங்களின் தாக்கம் அதிகமாக உள்ளது. வன்முறைக்காட்சிகள் கொண்ட திரைப்படங்கள் வருகின்றபோது அதனை பார்த்து தங்கள் வாழ்வியலாக மாற்றுகிறார்கள் மக்கள். வன்முறை சார்ந்த படங்கள் மலேசியாவில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.

தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்களின் ஆங்கிலக் கலப்பு மலேசியாவிலும் நடைமுறைக்கு வந்துகொண்டிருக்கிறது. தூய தமிழுக்கான எழுச்சி ஏற்படுவதே எங்களுக்கு ஆதரவாக இருக்கும் இவ்வாறு மலேசியாவின் துணை அமைச்சர் சரஸ்வதி கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.