’எல்ஜிஎம்’ படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவித்த படக்குழு!

தோனி எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் ‘எல்.ஜி.எம்’  படம் வரும் ஜூலை 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. ‘தல’ தோனி மற்றும் அவரது மனைவி சாக்‌ஷி தோனி ஆகிய இருவரும் இணைந்து…

தோனி எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் ‘எல்.ஜி.எம்’  படம் வரும் ஜூலை 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

‘தல’ தோனி மற்றும் அவரது மனைவி சாக்‌ஷி தோனி ஆகிய இருவரும் இணைந்து தொடங்கிய தோனி எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் முதல் திரைப்படம் ‘எல்.ஜி.எம்’ (லெட்ஸ் கெட் மேரீட்). அறிமுக இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் தயாராகும் இந்த திரைப்படத்தில் நடிகை நதியா, நடிகர் ஹரிஷ் கல்யாண், லவ் டுடே படத்தின் நாயகி இவானா, நகைச்சுவை நடிகர் யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

விஸ்வஜித் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ரமேஷ் தமிழ்மணி இசையமைக்கிறார். சாக்‌ஷி சிங் தோனியின் கருத்தாக்கத்தை மையமாக கொண்டு, குடும்ப பொழுதுபோக்கு அம்சத்துடன் தயாராகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் ‘எல்.ஜி.எம்’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டது. தொடர்ந்து படத்தில் இடம் பெற்றுள்ள ‘சலனா’ என்ற பாடலை வெளியிட்டது. இந்த பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதோடு, எதிர்பார்ப்பையும் அதிகரிக்க செய்துள்ளது. அண்மையில் இந்த படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக தோனி மற்றும் அவரது மனைவி சென்னை வந்தார்.

https://twitter.com/DhoniLtd/status/1681997499287076865

இந்நிலையில், எல்ஜிஎம் திரைப்படம் ஜூலை 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ காட்சியுடன் வெளியிட்டுள்ளது. இந்த தகவல் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.