முக்கியச் செய்திகள் தமிழகம்

மக்களவை உறுப்பினராக பதவியேற்றார் விஜய் வசந்த்

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற விஜய் வசந்த் நாடாளுமன்ற உறுப்பினராக இன்று காலை பதவியேற்றுக்கொண்டார்.

2019 நாடாளுமன்றத்தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் எச்.வசந்தகுமார் கொரோனா தொற்றால் காலமானதையடுத்து, அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் வசந்தகுமாரின் மகனும் நடிகருமான விஜய் வசந்த், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார். இவரை எதிர்த்து பாஜக சார்பில் பொன் ராதாகிருஷ்ணன் போட்டியிட்டார். இந்த இடைத்தேர்தலில் விஜய் வசந்த் 5,76,037 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கிய நிலையில், மக்களவை உறுப்பினராக விஜய் வசந்த் பதவிபேற்றுக்கொண்டார். சபாநாயகர் ஓம்பிர்லா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். தமிழில் பதவியேற்றுகொண்ட விஜய்வசந்த், பெருந்தலைவர் காமராஜரின் புகழ் வாழ்க, ராஜுவ் காந்தி வாழ்க என்று, பதவியேற்றபின் குறிப்பிட்டார்.

Advertisement:
SHARE

Related posts

தமிழ்நாட்டில் 17 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Gayathri Venkatesan

ட்விட்டர் ஸ்பேசஸ் மூலமாக நடத்தப்படும் சினிமா நிகழ்ச்சிகளால் சினிமா பிரபலங்களுக்கு சாதகமா? பாதகமா?

Vandhana

ஐக்கிய அரபு அமீரகத்தில் எஞ்சிய ஐபிஎல் போட்டிகள்: பிசிசிஐ முடிவு!

Halley karthi