விஜய் நடிக்கும் ‘தி கோட்’ – 3வது சிங்கிள் ரிலீஸ் எப்போது தெரியுமா?

விஜய் நடிக்கும் ‘தி கோட்’ திரைப்படத்தின் 3வது சிங்கிள் அடுத்த மாதம் வெளியாக உள்ளதாக படக்குழு தகவல் தெரிவித்துள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்…

விஜய் நடிக்கும் ‘தி கோட்’ திரைப்படத்தின் 3வது சிங்கிள் அடுத்த மாதம் வெளியாக உள்ளதாக படக்குழு தகவல் தெரிவித்துள்ளது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’.விஜய்யின் 68வது படமாக உருவாகி வரும் இப்படத்தில், மீனாட்சி சௌத்ரி, சினேகா, பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், லைலா, வைபவ், அரவிந்த் ஆகாஷ், விஜய் ராஜ், பிரேம் ஜி என நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கின்றனர். ஏ.ஜி.எஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

‘கோட்’ திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடத்தி முடிந்தது. இந்த திரைப்படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இதற்கிடையே, அண்மையில், ‘கோட்’ திரைப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது.

இதையும் படியுங்கள் : ஆன்லைன் பங்கு வர்த்தக முதலீடு மோசடி! – 2 நபர்கள் கைது : 5 செல்போன்கள் பறிமுதல்!

இந்நிலையில், இந்த திரைப்படத்தின் 3வது பாடல் அடுத்த மாதம் வெளியாக உள்ளதாக படக்குழு தகவல் தெரிவித்துள்ளது. இந்த பாடலில் நடிகர் விஜய்யுடன் நடிகை த்ரிஷா இணைந்து நடனம் ஆடியுள்ளார். இந்த பாடலின் லிரிக் வீடியோவாக வெளியாக உள்ளதாக படக்குழு தகவல் தெரிவித்துள்ளது. மேலும், இந்த படத்தின் இசை வெளியீடும் ஆகஸ்ட் மாதம் 3வது வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.