நடிகர் விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ்: 400 திரைகளில் மறுவெளியீடு!

விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் நடித்த சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் 400 திரைகளில் மறுவெளியீடாகியிருக்கிறது. தேசிய விருது வென்ற இயக்குநர் தியாகராஜன் குமாராஜா இயக்கத்தில் 2019ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. இந்த…

விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் நடித்த சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் 400 திரைகளில் மறுவெளியீடாகியிருக்கிறது.

தேசிய விருது வென்ற இயக்குநர் தியாகராஜன் குமாராஜா இயக்கத்தில் 2019ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின், காயத்ரி நடித்திருந்தார்கள். இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றாலும் வசூலில் பெரிதாக சாதனை புரியவில்லை.

இதையும் படியுங்கள் : வினேஷ் போகத்துக்கு வெள்ளி பதக்கம் கிடைக்குமா? இன்று இரவு தீர்ப்பு!

ஆஸ்கருக்கு அனுப்பியிருக்க வேண்டிய திரைப்படமென பலரும் இந்த திரைப்படத்தை புகழ்ந்தார்கள். இந்நிலையில் இந்த திரைப்படம் தெலங்கானா, ஆந்திர பிரதேசத்தில் 400 திரைகளில் நேற்று (ஆகஸ்ட் .9ம் தேதி ) வெளியாகியுள்ளன. தெலுங்கில் இந்த வாரம் பெரிய திரைப்படங்கள் எதுவும் வெளியாகாத நிலையில் இந்தப் படம் மறுவெளியீடானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.