32.7 C
Chennai
May 13, 2024
முக்கியச் செய்திகள் செய்திகள் சினிமா

தினமும் அப்டேட் கேட்கும் விஜய் ரசிகர்கள் : வெங்கட் பிரபுவின் நகைச்சுவை பதில்!

‘தளபதி 68’ திரைப்படத்தின் விஎஃப்எக்ஸ் பணிக்காக படக்குழு, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்திற்கு சென்றுள்ள நிலையில், நடிகர் விஜய்யின் ரசிகர்கள் தினமும் அப்டேட் உண்டா?” எனக் கேள்வி எழுப்பி வந்தனர். இதற்கு வெங்கட் பிரபு நகைச்சுவையாக பதிலளித்துள்ளார்.

விஜய் நடித்து வரும் 67 வது திரைப்படம் ‘லியோ’. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தின் மூலம் நடிகர் விஜய்யுடன் லோகேஷ் 2-வது முறையாக கூட்டணி சேர்ந்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வரும் அக்டோபர் மாதம் படத்தினை ரிலீஸ் செய்ய வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.’தளபதி 68’ திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்க இருப்பதாகவும் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் இந்தப் படத்தை தயாரிக்கவிருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. யுவன் சங்கர் ராஜா தான் இசையமைக்க உள்ளார். நடிகர் விஜய்யுடன் நடிகை ஜோதிகா ‘தளபதி 68’ படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் அண்மையில் வெளியானது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த படத்தில் விஜய், அப்பா – மகன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் அதில் ஒரு கதாபாத்திரத்துக்கு ஜோதிகாவும் மற்றொரு கதாபாத்திரத்துக்கு பிரியங்கா மோகனும் ஜோடியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. மேலும், இப்படத்தில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக ‘டாடா’ படத்தின் மூலம் பிரபலமடைந்த அபர்ணா தாஸ் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.இப்படத்தின் போட்டோ ஷூட் காட்சிகளை எடுப்பதற்காக சென்னையில் இருந்து புறப்பட்ட நடிகர் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு உள்ளிட்டோர் கடந்த புதன்கிழமை அதிகாலை அமெரிக்காவிலுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்திற்கு சென்றடைந்தனர். அங்கு 3டி விஎஃப்எக்ஸ் ஸ்கான் தொழில்நுட்பத்தில் லுக் டெஸ்ட் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் நடைபெறுகின்றன.

பொதுஇடங்களிலும் படப்பிடிப்பிலும் ரொம்பவே அமைதியாக இருக்கும் விஜய், நண்பர்களுடன் மட்டுமே ஜாலியாக இருப்பார் என சொல்லப்படுகிறது. அதேநேரம் விஜய் படத்தின் FDFS பார்க்க அவரது ரசிகர்கள் காத்திருப்பது தான் வழக்கம். ஆனால், அமெரிக்கா சென்றுள்ள தளபதி, ஹாலிவுட் படமான Equalizer 3 FDFS பார்த்து ரசித்துள்ளார். இதனை போட்டோ எடுத்துள்ள வெங்கட்பிரபு தனது டிவிட்டரில் ஷேர் செய்துள்ளார்.

இதனால் விஜய் ரசிகர்கள், “தினமும் புகைப்படம் போடுவீர்களா?”, “தினமும் விஜய் 68 அப்டேட் உண்டா?” எனக் கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் இயக்குநர் வெங்கட் பிரபு, “இன்று விடுமுறை” எனப் பதிவிட்டு உடன் சிரிக்கும் எமோஜிக்களை பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது ட்ரெண்டாகி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading