நடிகை நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன், தன் இரட்டை ஆண் குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடிய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் தான் நடிகை நயன்தாரா. 40 வயதை எட்டும் நயன்தாராவிற்கு இன்றும் கோலிவுட்டில் மார்க்கட் இருக்கின்றது. மேலும் எந்த படமாக இருந்தாலும் நயன்தாராவின் மனதிற்கு எட்டிய திரைப்படங்களில் மாத்திரம் தான் கமிட்டாகுவாராம்.
அந்த வகையில், “நானும் ரவுடிதான்” படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ளார். அந்த படத்தின் இயக்குநரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது அழகிய இரண்டு ஆண் குழந்தைகளும் இருக்கிறார்கள்.
மேலும் குழந்தைகளை கவனித்து கொள்ள வேண்டும் என்பதால் நயன்தாரா சினிமா பக்கம் கவனம் செலுத்தாமல் அவரின் பிஸ்னசில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது நயன் – விக்கி ஜோடியின் இரட்டை குழந்தைகளான உயிர், உலகத்திற்கு ஒரு வயது ஆக உள்ள நிலையில், தன் மகன்களின் கியூட்டான புகைப்படங்கள் சிலவற்றை தன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் விக்கி. இதைப்பார்த்த ரசிகர்கள் பொறுப்புள்ள அப்பாவாக விக்கி இருப்பதாக பாராட்டி வருகின்றனர்.







