25.5 C
Chennai
September 24, 2023
முக்கியச் செய்திகள் சினிமா

திருமண நாளை முன்னிட்டு குழந்தைகளின் புகைப்படத்தை வெளியிட்ட விக்னேஷ் சிவன்-நயன்தாரா!

முதலாம் ஆண்டு திருமண நாளை முன்னிட்டு விக்னேஷ் சிவன்-நயன்தாரா தம்பதி  குழந்தைகளின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவரும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த ஜூன் 9-ம் தேதி காதல் திருமணம் செய்து கொண்டனர். பின், இருவரும் கடந்த வருடம் வாடகை தாய் முறையில் இரட்டை ஆண் குழந்தைகள் பெற்றனர். திருமணமாகி 4 மாதங்களே ஆன நிலையில் குழந்தை பெற்றது பெரிய சர்ச்சை ஆனது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தொடர் சர்ச்சைகளில் சிக்கிய தம்பதியர்கள், குழந்தைகளின் பெயரையும், முகத்தையும் வெளியிடாமல் காத்து வந்தனர். விக்னேஷ் சிவன் ஏற்கனவே தனது சமூக வலைதள பக்கத்தில், குழந்தைகளை பற்றி பதிவிடும் போது,’உயிர்’, ‘உலகம்’ என பதிவிட்டு வந்தார்.

இந்தையடுத்து  ஒரு விருது விழாவில் கலந்துகொண்ட நயன்தாரா தனது மகன்களில் முழு பெயரை அறிவித்து இருக்கிறார். அதன்படி, ஒரு மகனுக்கு உயிர் ருத்ரோநீல் என் சிவன் ( Uyir Rudronil N Shivan ) என்றும் மற்றொரு பிள்ளைக்குஉலக் தெய்விக் என் சிவன் ( Ulag Dhaiveg N Shivan ) என்றும் பெயர் சூட்டியுள்ளனர். இவர்களின் பெயர்கள் யாரும் எதிர்பாராத விதத்தில் வித்தியாசமானதாக உள்ளதாக பலரும் தெர்வித்து வந்தனர்.

இந்நிலையில், நயன்தாரா- விக்னேஷ் சிவன் இன்று தங்களது முதலாம் ஆண்டு திருமணநாளை கொண்டாடி வருகின்றனர். இவர்களுக்கு ரசிகர்கள், திரை பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் நயன்தாரா- விக்னேஷ் சிவனின் இரட்டை குழந்தைகளான உயிர் மற்றும் உலக்-கின் தற்போதைய புகைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் லைக்குளை குவித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to TelegramShare to Print

Related posts

ஆசிய சாம்பியன்ஸ் ஆடவர் ஹாக்கி போட்டி – முதல் ஆட்டத்தில் தென் கொரியா வெற்றி!

Web Editor

அடுத்த 2மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு – தென் மண்டல வானிலை ஆய்வு மையம்

Web Editor

குடியிருப்புகளை அகற்றுவதற்கான தீர்மானத்தை நீக்க வேண்டும் – கே.பாலகிருஷ்ணன்

Web Editor