நாளை மறுநாள் வெளியாகவுள்ள விடுதலை திரைப்படத்திற்கான டிக்கெட் புக்கிங் தொடங்கிப் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில் படத்தின் மேக்கிங் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அசுரன் திரைப்படத்திற்குப் பின் விஜய் சேதுபதி, சூரியை வைத்து ‘விடுதலை’யை இயக்கி வருகிறார் வெற்றிமாறன். ஜெயமோகனின் துணைவன் என்ற சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு விடுதலை திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த, கதை முழுமையாகச் சினிமா ரசிகர்களைச் சென்றடைய வேண்டும் என்று வெற்றி மாறன் விரும்பியதால் 2 பாகங்களாக இப்படத்தை வெளியிடவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் பல புதிய படங்களைத் தயாரித்தும், வெளியிட்டும் வருகிறது. அந்த வகையில் இந்த பாடத்தையும் இன்போடைமெண்ட் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வழங்குகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நாளை மறுநாள் வெளியாகவுள்ள இப்படத்திற்கான டிக்கெட் புக்கிங் தொடங்கி பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டிருந்தது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.