நாக சைதன்யா 23 படத்தில் நடிகை சாய் பல்லவி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
ஒரு திரைப்படத்தின் தயாரிப்பை போலவே அப்படத்திற்கான முன் தயாரிப்பு பணிகளும் முக்கியமானது. குறிப்பாக உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு தயாராகும் நாக சைதன்யாவின் 23 வது படத்தின் படப்பிடிப்பு, சம்பவம் நடைபெற்ற இடங்களில் படமாக்கப்படவுள்ளது.
இதற்காகநாக சைதன்யா, ஸ்ரீகாகுளம் மாவட்டம் காரா மண்டலத்தில் உள்ள கே. மச்சிலேசம் என்னும் மீனவ கிராமத்திற்கு சென்றுள்ளார். அப்போது மீனவர்களையும் அவர்களின் குடும்பத்தினரையும் நாக சைதன்யா சந்தித்து பேசினார்.
இந்த திரைப்படத்தை ‘கார்த்திகேயா 2 படத்தின் இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்க உள்ளார்.
இப்படத்தை தெலுங்கு திரையுலகின் முன்னணி பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான கதா ஆர்ட்ஸ் தயாரிக்கிறது. இதற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
முதலில் கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக இருந்த கதாபாத்திரத்தில் தற்போது சாய் பல்லவி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில் கதாநாயகியின் முகம் மறைக்கப்பட்டுள்ளது. அதில் உள்ளவர் சாய் பல்லவிதான் என ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
The widely adored and loved lady joins the voyage of #NC23 🌊⛵#ShejoinstheNC23Voyage
Yuvasamrat @chay_akkineni @chandoomondeti #BunnyVas @GeethaArts #KarthikTheda pic.twitter.com/5Uusax4g4g
— Geetha Arts (@GeethaArts) September 19, 2023







