இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு, இயக்குனரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் டேட்ஸ் கொடுத்து வித்யாசமாக வீடியோ வெளியிட்டிடுப்பது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
போடா போடி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அவர் இயக்கிய நானும் ரௌடிதான் படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி நடித்திருந்தார்கள். இந்தப்படம் மிகப் பெரிய ஹிட் அடித்தது. பின்னர் நயன்தாராவை காலித்து திருமணமும் செய்து கொண்டார். கடைசியாக விக்னேஷ் சிவன் இயக்கிய காத்து வாக்குல ரெண்டு காதல் படம் 2022இல் வெளியானது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிக்கவிருந்தது. பின்னர் ஸ்க்ரிப்ட் பிரச்னைகளால் படம் கைவிடப்பட்டது. மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடா முயற்சி’ படத்தில் அஜித் நடிக்க உள்ளார். ஆனால் இந்தப் படத்தின் படப்பிடிப்பும் இன்னும் ஆரம்பமாகவில்லை. அஜித் படம் கைவிடப்பட்ட பிறகு லவ் டுட்டே பிரதீப் ரங்கநாதன் வைத்து இயக்கப் போவதாக தகவல் வெளியானது. இந்தப் படத்தில் நயன்தாரா முக்கிய கதாபத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியன்று விக்னேஷ் சிவன் பிறந்தநாளில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் டேட்ஸ் (பேரீட்சைப்பழம்) கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். டேட்ஸ் அதாவது தேதி கொடுத்துள்ளதைதான் இப்படி கூறியுள்ளதாக ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். லவ் டுடே படத்தின் மூலம் இயக்குநராக மட்டுமில்லாமல் நடிகராகவும் பிரதீப் மக்களிடையே பிரபலமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.