20 மணிநேரம் கடந்தும் டிரெண்டிங்கில் #Vettaiyan டிரெய்லர்!

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘வேட்டையன்’ படத்தின் டிரெய்லர் வெளியாகி 20 மணி நேரங்கள் ஆகியும் தற்போதுவரை டிரெண்டிங்கில் உள்ளது. ஜெய்பீம் புகழ் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வேட்டையன்’. இதில் ரஜினிகாந்த்…

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘வேட்டையன்’ படத்தின் டிரெய்லர் வெளியாகி 20 மணி நேரங்கள் ஆகியும் தற்போதுவரை டிரெண்டிங்கில் உள்ளது.

ஜெய்பீம் புகழ் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வேட்டையன்’. இதில் ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன், பகத் ஃபாசில், ராணா டகுபதி, ரித்திகா சிங், துஷாரா விஜயன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. படம் அக்டோபர் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் ‘மனசிலாயோ, ஹண்டர் வண்டார்’ போன்ற பாடல்கள் தற்போதுவரை ட்ரெண்டிங்கில் உள்ளது. இப்படத்திற்கு தணிக்கை வாரியம் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் நேற்று மாலை வெளியானது. வெளியானது முதல் தற்போதுவரை டிரெண்டிங்கில் உள்ளது. கிட்டதட்ட 46 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.