தமிழ்நாட்டில் வெகுவாக குறைந்த கொரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் புதிதாக 14,013 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 24,576 ஆக…

தமிழ்நாட்டில் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.

மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் புதிதாக 14,013 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 24,576 ஆக உள்ளது.

இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 33,75,329 பேராக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் தினசரி கொரோனா பாதிப்பு 2,054 ஆகக் குறைந்துள்ளது. கோவை மாவட்டத்தில் 1,696பேருக்கும், செங்கல்பட்டில் 1,198 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

 

மாநிலம் முழுவதும் உயிரிழப்புகளை பொறுத்த அளவில், இன்று 37 ஆக பதிவாகியுள்ளது. மொத்த உயிரிழப்பு 37,636 ஆக பதிவாகியுள்ளது. தற்போது 1,77,999 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.