கோட் படத்தின் விஎப்எக்ஸ் பணிகள் நிறைவடைந்ததாக இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். நடிகர் விஜய்க்கு இது 68வது படம் ஆகும். தி கோட் படத்தின் மூலம் நடிகர் விஜய் மற்றும் வெங்கட்பிரபு முதன்முறையாக இணைந்துள்ளனர். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த டிசம்பர் மாதம் வெளியானது. படம் வரும் விநாயகர் சதுர்த்திக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
https://x.com/vp_offl/status/1791666240790183954
இந்நிலையில், தற்போது விஎஃப்எக்ஸ் பணிகள் நிறைவடைந்துவிட்டதாக குறிப்பிட்டு விஜய்யின் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ள இயக்குநர் வெங்கட் பிரபு, அதன் அவுட் புட்டை காண ஆவலோடு இருப்பதாக பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.







