வெனிசுலாவில் நேற்று முன் தினம் அடுத்தடுத்து இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. அவை ரிக்டர் அளவில் முறையே 7.2 மற்றும் 7.5 ஆக பதிவாகியுள்ளது. பேரிடரின் தீவிரத்தை கருத்தில் கொண்டு தேசிய அவரசர நிலையை அந்நாட்டின் தற்காலிக அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் பிரகனடப்படுத்தியுள்ளார்.
இந்த நிலையில் வெனிசுலாவில் நிலநடுக்கப் பேரிடரால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 920-ஆக உயர்ந்துள்ளது. மேலும் 3,360 -க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 172 பேர் இடிந்து விழுந்த கட்டிடங்களுக்கு அடியில் சிக்கியுள்ளனர். 50,000-க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேரிடரில் சிக்கி உயிர் பிழைத்தவர்களைக் கண்டறிய உதவுவதற்காக, 17 நாடுகளைச் சேர்ந்த தேடுதல் மற்றும் மீட்புக் குழுக்கள் அணிதிரட்டப்பட்டு வருவதாக ஐ.நா. மனிதாபிமான அமைப்பான ஓச்சா தெரிவித்துள்ளது. ஸ்பானிய, சால்வடார், சுவிஸ், கொலம்பிய மற்றும் மெக்சிகன் மீட்புக் குழுக்கள் ஏற்கனவே களத்தில் உள்ளன.
இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியவர்களைக் கண்டறியப் பயிற்சி பெற்ற நாய்களுடன் கூடிய 250-க்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்ட பேரிடர் மீட்புக் குழுவை அனுப்புவதாக அமெரிக்கா தெரிவித்ததுள்ளது.




