விக்ரம் நடிக்கும் வீர தீர சூரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருவதாக புதிய போஸ்டரை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.
தங்கலான் திரைப்படத்தைத் தொடர்ந்து, நடிகர் விக்ரமின் 62வது படத்தை பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சித்தா உள்ளிட்ட படங்களை இயக்கிய எஸ்.யு.அருண்குமார் இயக்குகிறார். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ரியா ஷிபு இந்த படத்தை தயாரிக்கிறார். இப்படத்தில் துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, சுரஜ் வெஞ்சரமூடு உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளனர்.
இந்த படத்திற்கு ‘வீர தீர சூரன்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக விக்ரமின் பிறந்த நாள் அன்று படக்குழு டீசர் வெளியிட்டு அறிவித்தது. மேலும், தற்போது இரண்டாவது பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தின் வெளியீட்டிற்குப் பிறகு, படத்தின் முதல் பாகம் உருவாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
சம்பவம் loading …
–#Veeradheerasooran pic.twitter.com/sTTOxgpu7g— Vikram (@chiyaan) May 11, 2024
அந்த வகையில், வீர தீர சூரன் இரண்டு பாகங்களாக உருவாக உள்ளதை படக்குழு உறுதி செய்துள்ளது. முன்னதாக, இந்த படத்தின் அறிவிப்பு கடந்த அக்டோபரில் ஒரு ப்ரோமோ வீடியோவுடன் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.







