TNSTC மற்றும் NPCIL சார்பில் அறிவியல் விரிவுரைத் தொடர் நிகழ்ச்சி – திரளான மாணவர்கள் பங்கேற்பு!

தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையமும், இந்திய அணுசக்தி கழகமும் இணைந்து மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் அறிவியல் விரிவுரைத் தொடர் நிகழ்ச்சியை நடத்தினர். சென்னையில் உள்ள தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் மற்றும்…

தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையமும், இந்திய அணுசக்தி கழகமும் இணைந்து மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் அறிவியல் விரிவுரைத் தொடர் நிகழ்ச்சியை நடத்தினர்.

சென்னையில் உள்ள தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் மற்றும் மும்பையில் உள்ள இந்திய அணுசக்தி கழகம் இணைந்து, தேசிய தொழில்நுட்ப தினத்தை முன்னிட்டு இன்று சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தில், பிரபல அறிவியல் விரிவுரைத் தொடர் நிகழ்ச்சியை நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 70 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சி மிகவும் மகிழ்ச்சியாகவும், ஊக்கமாகவும் இருந்ததாக அந்த மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிகழ்ச்சியை இந்திய அணுசக்தி கழக துணை பொது மேலாளர் அம்ரிதேஷ் ஸ்ரீவஸ்தவா முன்னிலையில் தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் செயல் இயக்குநர் ஐகே லெனின் தமிழ்க்கோவன், அறிவியல் உதவியாளர் ஜே. துர்கா பவானி, சென்னை கோளரங்க பொறியாளர் கே.கோமதி ஆகியோர் சிறப்பாக நடத்தினர்.  நிகழ்ச்சியில் லெனின் தமிழ்க்கோவன் தலைமையுரையாற்றினார். இதனையடுத்து அம்ரிதேஷ் ஸ்ரீவஸ்தவா, இந்தியாவில் அணுமின் நிலையத்தின் முக்கியத்துவம் மற்றும் பயன்பாடுகள் குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் வழிகாட்டி விரிவுரையாளர் சுடலை நன்றியுரையாற்றினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.