முக்கியச் செய்திகள் தமிழகம்

வைகை அணையிலிருந்து நீர் திறப்பு!

ராமநாதபுரம் மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், வைகை அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறந்துவிட வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள், பரமகுடி சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்டோரின் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வைகை ஆற்று படுகையை நனைக்கும் வகையில், வைகை அணையில் இருந்து நேற்று முதல் தண்ணீர் திறக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்தது. ஆயிரம் மில்லியன் கன அடி வீதத்தில் 5 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட உத்தரவிடப்பட உள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement:

Related posts

ரூ.96,000 மதிப்புள்ள ‘ஏசி’ ரூ.5,900க்கு விற்பனை; குவிந்த வாடிக்கையாளர்களுக்கு ஏமாற்றம்

மது போதையில் தந்தையையே குத்தி கொலை செய்த மகன்!

Vandhana

சீதாராம் யெச்சூரியின் மூத்த மகன் கொரோனாவால் உயிரிழப்பு: வைகோ இரங்கல்

Halley karthi