கடந்த 5 நாட்களில் ஒன்றரை கோடி சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தி சாதனை படைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதமாக தெரிவித்தார்.
மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள சித்தரஞ்சன் தேசிய புற்றுநோய் நிறுவனத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள 2வது வளாகத்தை பிரதமர் மோடி காணொலி வாயிலாக திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் காணொலி வாயிலாக கலந்து கொண்டார்.
அப்போது காணொலி வாயிலாக உரையாற்றிய பிரதமர் மோடி, கடந்த 5 நாட்களில் தடுப்பூசி இயக்கம் மூலம் 15 முதல் 17 வயதுக்குட்பட்ட ஒன்றரை கோடி சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்துள்ளோம் எனக் கூறினார். மேலும், நாட்டில் தகுதிவாய்ந்த 90 சதவீதம் நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.








