உத்தரப்பிரதேசம் : கனமழை, சூறைக்காற்றால் 111 பேர் உயிரிழப்பு!

உத்தரப் பிரதேசத்தில் கடும் புயல் மற்றும் கனமழை வீச்சில் குறைந்தது 111 பேர் உயிரிழந்துள்ளனர்.

உத்தரப்பிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களில் சூறாவளிக்காற்றுடன் கனமழை பெய்தது. இந்தப் புயலால் 227 வீடுகள் முற்றிலுமாகச் சேதமடைந்துள்ளன. 170 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. புயலின் வேகம் மணிக்கு 74 முதல் 130 கிலோமீட்டர் வரை இருந்ததாகவும், பரேலி மற்றும் பிரயாக்ராஜ் மாவட்டங்களில் அதிகபட்ச வேகம் பதிவாகியுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் பகுதியில் உள்ள மேற்கத்திய சுழற்சி மற்றும் மத்திய உத்தரப்பிரதேசத்தில் உள்ள சுழற்சி மண்டலம் காரணமாக இந்தக் கடும் புயல் ஏற்பட்டதாக வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மாலை நேரத்தில் சந்தைகள் மற்றும் வெளிப்பகுதிகளில் மக்கள் அதிகம் இருந்தபோது புயல் வீசியதால் உயிரிழப்பு அதிகரித்தது.

பிற மாவட்டங்களான பராபங்கி, பஹ்ராயிச், கான்பூர் தேவாத், பாஸ்தி, சம்பல், ஹர்தோய், உன்னாவ் உள்ளிட்ட பகுதிகளிலும் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் மாநிலத்தில் 26 மாவட்டங்களில் ஏற்பட்ட கடும் புயல் மற்றும் கனமழை வீச்சில் 111 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 72 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.