அமெரிக்க அதிபர் தேர்தல் விவாதத்தில் பங்கேற்க கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமாருக்கு ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நவம்பர் 5 ஆம் தேதி நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். டிரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பின்னர் கடந்த 19ம் தேதி குடியரசு கட்சியின் தேசிய மாநாடு நடைபெற்று குடியரசு கட்சியின் அதிகாரப்பூர்வ அதிபர் வேட்பாளராக டொனால்டு டிரம்ப் அறிவிக்கப்பட்டார். ஜனநாயக கட்சி வேட்பாளராக களமிறங்கிய தற்போதைய அதிபர் ஜோ பைடன் விலகிய நிலையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் அக்கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் கமலா ஹாரிஸ் வெல்வார் பல கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன. அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்த 2016 ஆம் ஆண்டில் டொனால்ட் டிரம்பின் வெற்றி மற்றும் 2020 ஆம் ஆண்டில் ஜோ பைடனின் வெற்றி ஆகிய இரண்டையும், ஆலன் லிச்மேன் துல்லியமாக கணித்திருந்தார். இந்த தேர்தலில், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் கமலா ஹாரிஸ், தனது போட்டியாளரான குடியரசுக் கட்சி வேட்பாளரும் முன்னாள் அதிபருமான டொனால்ட் டிரம்பை தோற்கடிப்பார் என்று ஆலன் கணித்துள்ளார். ஆலனின் கணிப்பு, கடந்த 10 அமெரிக்க அதிபர் தேர்தல்களில் 9 தேர்தல்களில் உண்மையாகியுள்ளது.
இதையும் படியுங்கள் : பீகாரில் #TrainAccident – ஓடும்போதே ரயில் பெட்டிகள் இரண்டாக பிரிந்ததால் பரபரப்பு!
வருகிற செப்டம்பர் 10 ஆம் தேதியில், டிரம்புக்கும் கமலா ஹாரிஸுக்கும் இடையிலான அதிபர் போட்டிக்கான விவாதம் நடக்கவுள்ளது. இந்த நிலையில் அதிபர் தேர்தல் விவாதத்தில் பங்கேற்க கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமாருக்கு ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை விவாதம் நடைபெறவுள்ளதால், இன்றிரவு கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் அமெரிக்கா செல்ல உள்ளதாகவும் அங்கே முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவை சந்திக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.







