சிக்குன்குனியாவுக்கு உலகின் முதல் தடுப்பூசிக்கு அமெரிக்க சுகாதாரத் துறை அனுமதி!!

சிக்குன்குனியாவுக்கு உலகின் முதல் தடுப்பூசிக்கு அமெரிக்க சுகாதாரத் துறை அனுமதி அளித்துள்ளது. கொசுக்களால் பரவும் சிக்குன்குனியா, உலக அளவில் நலவாழ்வுக்கு பெரிய அச்சுறுத்தலாக உருவாகி வருவதால் சிக்குன்குனியாவுக்கு தடுப்பூசி அவசியம் என்று அமெரிக்க சுகாதாரத்…

சிக்குன்குனியாவுக்கு உலகின் முதல் தடுப்பூசிக்கு அமெரிக்க சுகாதாரத் துறை அனுமதி அளித்துள்ளது.

கொசுக்களால் பரவும் சிக்குன்குனியா, உலக அளவில் நலவாழ்வுக்கு பெரிய அச்சுறுத்தலாக உருவாகி வருவதால் சிக்குன்குனியாவுக்கு தடுப்பூசி அவசியம் என்று அமெரிக்க சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பாவின் வால்னிவா என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ள எக்ஸ்சிக் (Lxchiq) என்ற பெயரில் விற்பனைக்கு வரும் இந்த தடுப்பூசி, 18 வயது மற்றும் அதற்கும் மேற்பட்ட வயதுடையவர்களுக்கு செலுத்தப்படவிருப்பதாக அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கும் இந்த எக்ஸ்சிக் தடுப்பூசி விரைவில் பிற நாடுகளிலும் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறத.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.