நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது?

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதி அறிவிப்பு வரும் 17ஆம் தேதி வெளியாக வாய்ப்பு உள்ளதாக என தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை ஊரகப் பகுதிகளுக்கு மட்டுமே உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. 5…

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதி அறிவிப்பு வரும் 17ஆம் தேதி வெளியாக வாய்ப்பு உள்ளதாக என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை ஊரகப் பகுதிகளுக்கு மட்டுமே உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. 5 ஆண்டுகளாகியும் இதுவரை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவில்லை. மக்கள் பிரதிநிதிகளின் பணிகளை தனி அதிகாரிகள்தான் கவனித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் 21 மாநகராட்சிகள் உட்பட நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. வார்டு மறுவரையறை பணிகள் ஏறத்தாழ முடிவடைந்துள்ள நிலையில், இடஒதுக்கீடு பட்டியல், வாக்குச்சாவடிகள், வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்த்தல், உள்ளிட்ட பணிகளும் முடிவடையும் தருவாயில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதனிடையே உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதியை பொங்கல் விடுமுறைக்குப் பின்பு வரும் 17-ம் தேதி அறிவிக்க மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிப்ரவரி 2-வது வாரத்தில் தேர்தல் நடைபெறும் என்றும், மேயர், சேர்மன் பதவிகளுக்கு வழக்கம் போல் மறைமுக தேர்தலாகவே நடத்தப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.