UPSC தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு | எத்தனை காலியிடங்கள்? விண்ணப்பிக்க கடைசி நாள் எப்போது?

நடப்பு ஆண்டிற்கான யுபிஎஸ்சி தேர்வுக்கான அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்,  ஆண்டுதோறும் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு குடிமைப் பணிகளுக்கான தேர்வுகளை நடத்தி வருகிறது.  இந்த தேர்வு முதல்நிலைத் தேர்வு,  முதன்மைத் தேர்வு, நேர்காணல்  என மூன்று நிலைகளைக் கொண்டது.  முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறுவோர் முதன்மைத் தேர்வுக்கு அழைக்கப்படுகின்றனர்.  முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நேர்காணலுக்கு செல்கின்றனர்.

இறுதியாக,  முதன்மை மற்றும் நேர்காணல் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும்.  இந்த தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் பல்வேறு பதவிகள் நிரப்பப்படுகின்றன. இந்த நிலையில் நடப்பு ஆண்டிற்கான யுபிஎஸ்சி தேர்வுக்கான அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி யுபிஎஸ்சி தேர்வுகளுக்கு இன்று (ஜனவரி 22) முதல் பிப்ரவரி 11 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பணிகள் உள்ளிட்ட 979 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. CSE முதல்நிலைத் தேர்வு நடைபெற உள்ளது மே 25, 2025 அன்று நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.