பொதுவாக எல்லோரும் சொல்வதைப்போல மனிதனுக்கு ஆறடி நிலம் போதுமானதல்ல. மாறாக இந்த உலகமே உயிருள்ள ஒரு மனிதனுக்கு வேண்டியதாயிருக்கிறது என்றார் தஸ்தயேவ்ஸ்கி. ஆனால், இன்றளவும், ஓரின சேர்க்கையாளர்களுக்கு மனித சமூக ஆறடிக்கும் குறைவாகவே இடமளிக்கிறது. ஒருவழியாக தற்போது இவர்கள் மீதான சிந்தனை போக்கு சற்றே மாறியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் லக்னோ மாவட்டத்திலுள்ள தாகூர்கஞ்ச் பகுதியில் ஓரின சேர்க்கையாளர் ஜோடியினர் அடைத்து வைக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஓரின சேர்க்கையாளர்கள் தங்கள் வாழ்கையில் இணைந்து பயணிக்க முடிவெடுத்துள்ளனர். இந்நிலையில் அதில் ஒருவருடைய குடும்பத்தினர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, இருவரையும் வீட்டில் அடைத்து வைத்து சித்திரவதை செய்துள்ளனர்.
இந்த கொடுமையிலிருந்து இருவரில் ஒருவர் மட்டும் சுவர் ஏறி குதித்து தப்பித்து தாகூர்கஞ்ச் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தார். பின்னர் இது குறித்து புகார் அளித்தபின் காவல்துறையினர் உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி ஒரு குழுவுடன் சென்று சிக்கியிருந்த மற்றொரு பெண்ணையும் மீட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, இருவரின் குடும்பத்தினரை காவல் நிலையத்திற்கு அழைத்து காவல்துறையினர் எச்சரித்து அனுப்பியுள்ளனர். செய்தியாளர்களை சந்தித்த இருவரில் ஒருவர், தங்களுக்கு கடந்த ஆண்டு புத்தேஸ்வர் கோயிலில் தங்களுக்கு திருமணம் நடைபெற்றது என்றும், ஒடிசா உயர்நீதிமன்றம் ஓரின சேர்க்கையாளர்கள் இணைந்து வாழலாம் என வழங்கிய தீர்ப்பினையும் மேற்கோள் காட்டி பேட்டியளித்துள்ளார்.
இனி ஓரின சேர்க்கையாளர்களுக்கு நாமும், நாம் சார்ந்துள்ள சமூகமும் ஆறடிக்கும் அதிகமான நிலத்தை வழங்குவோமாக.